உங்கள் அபிமான காமிக்ஸ் இதழ்களின் வலைப்பக்கத்திற்கு நல்வரவு !

1972ல் தமிழ் காமிக்ஸ் உலகத்திற்கு இரும்புக்கை மாயாவியை அறிமுகம் செய்ததோடு துவக்கம் கண்டது  நமது முத்து காமிக்ஸ்! குடும்பத்தில் அனைவரும் படிக்கக்கூடிய தரத்திலான சர்வதேசச் சித்திரக்கதைகளை அழகுத் தமிழில் வெளியிடுவதை ஒரு பெருமையாகக் கருதுகிறோம் நாங்கள்!  1984ல் லயன் காமிக்ஸ் எனும் புதியதொரு இதழும் உருவாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து உலகின் தலைசிறந்த பல காமிக்ஸ் தொடர்கள் சரமாரியாய் தமிழாக்கம் கண்டு வருகின்றன!

2012 முதல் முழு வண்ணத்தில், உயர் தர ஆர்ட் பேப்பரில் அற்புதமாய் நமது வெளியீடுகள் வந்து கொண்டுள்ளன! நேரடிச் சந்தாக்கள், ஆன்லைன் விற்பனைகள் என்பதே தற்சமயத்து விநியோக முறைகள் என்பதால் அவை தொடர்பான விபரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன!

லயன் - முத்து காமிக்ஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிட உங்களை அன்போடு அழைக்கிறோம்!